"I can travel miles and miles to see this gentleman's off drive" இது டோனி கிரேஹ் கங்குலி பற்றி கூறியது. "I am seeing a wonderfull batsman as richards" இது பேரி ரிச்சர்ட், கங்குலி பற்றி கூறியது.
மிகவும் ஆக்ரோஷகமாக விளையாட கூடிய அரிய வீரர். ஆன் டிரைவ் அடிக்கிறதுல அண்ணனை விட்டா
இன்னைக்கு வரைக்கும் வேற ஆள் கிடையாது. ஸிக்சர் இவர் அடிக்கிறத பார்க்கிறதுக்கு அவ்வளவு அழகா இருக்கும்.
கங்குலி கொஞ்ச நாட்களாக அவருடைய முயற்சிகள் சரியாக அமையவில்லை. யாருக்குதான் முயற்சிகள் சரியாக
அமைந்துள்ளன எல்லா பொழுதும். சச்சின் கூட சில சமயங்களில் சரியாக ஆடுவது இல்லை. கங்குலி ன்னு இல்லைங்க. லாரா, ஜெயசூரியா,.......... உள்பட எல்லாருக்கும் சி(ப)ல சமயங்களில் முயற்சிகள் சரியாக அமையவில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைதத உற்சாகமும் ஊக்கமும் கங்குலிக்கு கிடைக்கவில்லை என்பது எனது கருத்து.
இந்திய அணிக்கு புத்துயிர் அளித்தவர் கங்குலி என்பதில் மாற்று கறுத்து இருக்காது என்று நம்புகிறேன். ஆஸ்த்ரேலிய அணியை அவர் எதிர்கொன்ட பாங்கு மறக்க முடியுமா என்ன?. அணி சோர்ந்து போகும் போது எல்லாம் அணியை துவளாமல் வழி நடத்திய வெற்றிகரமான அணித்தலைவர்.அவருக்கும் சச்சினுக்கும் ஆயிரம் கறுத்து வேறுபாடுகள் இருந்த போதும் அணி பாதிக்காமல் பார்த்துகொன்டார்.
ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் விளையாட்டில் ஒரு விளையாட்டு வீரர் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்றுதான் தோன்றுகிறது.
எனினும் கங்குலி மீண்டும் அணிக்கு வருவார் போல தெரிகிறது. அவர் நன்றாக விளையாட வேண்டும் என்று நினைப்போம். இல்லாவிட்டால்லும் அவருக்கு ஒரு நல்ல பிரிவு ஆட்டம் கொடுப்போம்.
புதன், 29 நவம்பர், 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
அகில், கிரிக்கட்டில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லீங்க, எனினும் ஊர் பாசம்னு ஒன்னு இருக்குதே[கோயம்புத்தூர்] அதான் முதல் பின்னூட்டம் போட்டுடேன், தொடர்ந்து நிறைய எழுதுங்க அகில்
நான் பக்கத்து ஊர் காரணுங்க ( திருப்பூர்)
அன்பு அகில்,
சரியாகச் சொன்னீர்கள், யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப கங்குலி பல முறைகள் தோல்வியைத் தழுவியபோதிலும் இந்தியக் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சிறப்பான இடம் வகித்து, பல வெற்றிகளை ஈட்டித் தந்த அவரது திறமையையும் உழைப்பையும் மதிக்காமல்ம, பயிற்சியாளராகப் பணிபுரிந்த யாரோ வெள்ளைக்காரன் ஒருவன் பேச்சைக்கேட்டுக்கொண்டு நம் விளையாட்டு வீரன் ஒருவனைக் கேவலப் படுத்தியது மிகவும் தவறு. ஒரு அந்நிய நாட்டவன் ஏன் நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியாளனாக இருக்கவேண்டும்? நம் நாட்டில் பயிற்சி கொடுக்கும் திறமையுள்ளவர்கள் இல்லையா? கபில்தேவ் சிலகாலம் இப்பணியை செய்தபோது அவர்மேல் பொய்யாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவதூறு கிளப்பி அவர் மனம் மிக நோகும்படிச் செய்தவர்கள் தானே நாம்.
நம்மை நாமே மதிக்காதவரை பிறர் மதிப்பார்களா?
ஆகிரா
//ஆன் டிரைவ் அடிக்கிறதுல அண்ணனை விட்டா
இன்னைக்கு வரைக்கும் வேற ஆள் கிடையாது. //
ஆஃப் ட்ரைவ் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடைய பலமே ஆஃப் ஸைட்தான். Silken Drives என்று சொல்லும் அளவிற்க்கு அருமையாக ஆடுவார். ஆனால் அதனாலேயே அவரால் ஆன் ஸைடில் அவ்வளவு பிரகாசிக்க முடியாமல் போனது. ஷார்ட் லென்த், மிடில் ஸ்டிக்குக்கு வரும் பந்துகளை சரியாக சமாளிக்க முடியாமல் தினறுவார் கொஞ்சம்.
கருத்துரையிடுக