இன்னிக்கு வரைக்கும் முடிவு காணப்ப்டாத உயிர்க்கொல்லி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாள் இன்று
அனுசரிக்கபடுகிறது. மொத்தமா நான்கு கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா இதில் பெரும்பான்மை பங்கு வகிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை
என்றுதான் புள்ளிவிவர கண்க்குகள் கூறுகின்றன.
உலக தொண்டு அமைப்புகள் பலவும் இந்தியாவில் எய்ட்ஸின் வளர்ச்சியை குறைக்க பாடுபடுகின்றன். இந்திய அரசாங்கம் புள்ளி இராஜாவுக்கு எய்ட்ஸ்
வருமா என்று கேட்டது மட்டும் தான் எனக்கு தெரியும். இதுவரை உருப்படியாக எதாவது திட்டம் தீட்டி நிறைவேற்றி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இதுவரை இல்லாவிட்டாலும் பரவாயில்லை இனிமேலாவது அரசாங்கம் பாலியல் கல்வியை அறிமுகபடுத்துவது போன்றவற்றை நிறைவேற்றினால் பராவாயில்லை.
அன்புமணி இராமதசு அவர்கள் இப்பொழுது சுகாதார துறை அமைச்சராக இருக்கார். உருப்படியாக எதாவது உருப்படியாக செய்ய நினைத்தால் எய்ட்ஸ் நோயை பற்றி
அடுத்த தலைமுறை கவலைபடாமல் இருக்க நல்ல திட்டம் தீட்டி அதை நிறைவேற்றாலாம்.
அரசாங்கத்தை விடுவோம், நம்மை போன்ற தனிநபர்ளும் கொஞ்சமாவது எய்ட்ஸ்க்கு எதிராக வலு சேர்ப்போம். நம் ,நம் உறவினர், நண்பர் களுடைய பதின்ம
வயதில் உள்ள குழந்தைகளிடம் இது பற்றி பேசுவோம். (எப்படி பேசுவது என்று பெற்றோருக்கு பாலியல் கல்வி வலைப்பூ பார்த்து தெரிந்து கொள்ளவும்). இதை நாம்
ஒரு கடமையாக கருதாமல் நம் சந்ததியருக்கு வாழ்வதற்கு தர வேண்டிய உரிமையாக கருதுவோம்.
மத்திய, கீழ் மத்திய தர குடும்பங்கள் குறிப்பாக குழந்தைகள் அப்பாவி பெண்கள் தான் அதிகமாக பாதிக்கபடுகின்றன. காரணம் யாருன்னு பார்த்தா எல்லாம் நாமதான்(
ஆண்கள் தான்). எல்லாரையும் சொல்லலை. மனைவி, அவளின் காதல், குழந்தைகளை எல்லாம் மறக்கவேண்டியது அப்புறம் மனைவிக்கும் அதை கொடுக்க வேண்டியது. இதில் கல்லூரி மாணவர்கள் கூட இப்பொழுது மிகமிகமிக அதீத ஆர்வம் காட்டுகின்றனர். காலம் உள்ளது நமக்கு ஒருத்தி வருவாள் என்ற எண்ணம் இல்லாமல் விளையாட வேண்டியது. கல்லூரி மாணவர்கள் இப்போ எல்லாம் எங்க சுற்றுலா போறாங்கன்னு பாருங்க. கோவா தான் இலக்கு கேட்டால் இண்டஸ்டிரியல் டுர். பெண்களே நீங்களும் திருமணத்திற்கு முன் பையனின் இரத்த பரிசோதனை அறிக்கை கேளுங்கள்,முடிந்தால் கூட போய் நீங்களும் ஒரு இரத்த பரிசோதனை செய்து பையன் கையில் கொடுங்கள்.
கொஞ்சம் எல்லாரும் இதை இந்த ஓழுங்கீனமான விளையாட்டை நிறுத்துவோம்.
வியாழன், 30 நவம்பர், 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
:((
\"பெண்களே நீங்களும் திருமணத்திற்கு முன் பையனின் இரத்த பரிசோதனை அறிக்கை கேளுங்கள்,முடிந்தால் கூட போய் நீங்களும் ஒரு இரத்த பரிசோதனை செய்து பையன் கையில் கொடுங்கள்.\"
நல்ல ஆலோசனை. விழிப்புணர்ச்சி உண்டு பண்ணட்டும் உங்கள் பதிவு.
[ can you please increase the font size in ur post, its lil hard to read, thanks!]
நன்றி.திவ்யா.
i ll increase the font size..
பூங்குன்றன்...
நீங்க அருமையா எழுதி இருக்கீங்க.
நிறைய வலைப்பதிவாளர்கள்
இத பத்தி எழுதி இருக்கிறது மன நிறைவா இருக்கு.. என் பதிவ படிச்சதுக்கு நன்றி
பாராட்டுக்கள்
இப்ப தான் பார்த்தேன் கோவையா??... சந்தோஷம்... நானும் கோவை தான்...
AIDS to studynu bookla varum :)
But inda AIDS kodumayaanadhu enbadhil ayyamae illai. nalla post maa
வாங்க கிட்டு.
நன்றிகள்
கருத்துரையிடுக