வியாழன், 27 நவம்பர், 2008

நன்றிகள் பல...நண்பர்களே !

இன்னிக்கு அமெரிக்க நாடு முழுதும் 650 சொச்சம் பவுண்டு வான்கோழி கறியை தின்று விட்டு செவ்விந்தியர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டுள்ளது. செவ்விந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாட ஆரம்பித்த இந்த நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை, இன்று சிறிது மாற்றம் கண்டு மற்றவர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் ஒரு நாளாக இருக்கிறது.



நேற்று இரவு டிவி பார்க்கும் போது, நாம இன்னிக்கு நன்றி தெரிவிக்கறதுன்னா யாருக்கு தெரிவிக்கலாம்ன்னு யோசிக்கிறதுக்கு மின்னாடியே மின்னலென நினைவில் பளீரடித்தவர்கள் நீங்கள்தான்.....

நண்பர்களே...



கல்லூரியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தோம்.தொடர்கிறோம். அனைவரும் இருப்பது உலகின் ஒவ்வோரு மூலைகளில், மின் தொடர்பு நாட்களுக்கு ஒருமுறைதான். தொலைதொடர்பும் கம்மிதான். ஆனாலும்


என் நிகழ்வுகளில் நீங்கள்.


உங்கள் நிகழ்வுகளில் நான்.


அனைத்துக்கும், அனைவருக்கும் முன்.



நான் சறுக்கிய பொழுதுகளில், வாடிய பொழுதுகளில், இருள் நீக்கியவர்கள் நீங்கள்.தோள் கொடுத்தவர்கள் நீங்கள்.


கொண்டாடிய பொழுதுகளில், மகிழ்ந்த பொழுதுகளில், என்னைவிட அகமகிழ்ந்தவர்கள் நீங்கள். தோளில் ஏற்றிகொண்டவர்கள் நீங்கள்.


என்னை நானாக ஏற்றுக்கொண்டவர்கள் நீங்கள். என் வாழ்வின் நம்பிக்கைகள் நீங்கள் மட்டுமே.



நன்றிகள் நண்பர்களே..




பின் குறிப்பு...கேபர்னெட் ஒயினும் வான்கோழி வறுவலும் இன்று இரவு உங்களுக்காக மட்டுமே.
Hail Friendship....

2 கருத்துகள்:

மண்சட்டி சொன்னது…

வணக்கம் நண்பரே...
அமீரகத்திலிருந்து... ஓர் மண்சட்டி..உங்கள் வலை தேடி வந்தது...

வாழ்த்துக்கள்..

அன்புடன் மண்சட்டி
http://elangovan68.blogspot.com

அகில் பூங்குன்றன் சொன்னது…

நன்றி மண்சட்டி