வியாழன், 27 நவம்பர், 2008

தாழம் பூ



தாழம் பூ

தாழம்பூ பார்த்து இருக்கீங்களா. வெளிர் மஞ்சள் நிறத்திலும்,சில சமயம் தங்க மஞ்சள் நிறத்திலும் இருக்கும். எங்க அம்மாவுக்கு ரொம்பபிடித்த பூக்களில் இதுவும் ஒன்று.


இதன் வாசம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று. தாழம்பூவின் வாசனை சும்மா கும்முன்னு இருக்கும். கிளர்ச்சியூட்டகூடியது. கோவை காந்திபுரத்தில் நெல்லை லாலா கார்னரை கடந்து போகும் இடத்தில் இரு பெண்கள் கூடையில் பூ வைத்து வியாபராம் செய்வார்கள். இவர்களிடம் பெரும்பாலும் செண்பகமும் ஜாதிமல்லியும் இருக்கும்..எப்போதாவது தாழம்பூவும் இருக்கும். அவர்கள் பூ விற்கும் இடத்தை நெருங்கும் முன்பே அவர்களிடம் இருந்தால், தாழம் பூ நறுமணம் அங்குள்ள விநாயகர் கோவில் டூ அன்ணபூர்னா வரை கமழும்.

மாலை நேரத்தில் அந்த நறுமணத்தில் அங்கு உலகமே அழகாக தோன்றும். பூமார்க்கெட் அப்புறம் காந்திபுரம் தவிர வேறு எங்கும் இந்த பூ கோவையில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

தாழம் பூ என்றாலும் இது மற்ற பூக்கள் போல இதழ்கள் கொண்டு இருப்பதில்லை மாறாக தாழம் மடல்கள் கொண்ட பூ.. தலையில் சூடும் போது பெண்கள் இதை இரண்டாக அல்லது மூன்றாக மடித்து கொள்வார்கள். கடவுளுக்கு சூட்டுவது இல்லை என்று நினைக்கிறேன். தாழம் பூ சிவனிடம் பொய்சாட்சி சொன்னதால் விலக்கபட்ட பூ என்பார்கள். ஆனா எங்கோயா சந்தனம் தாழம் மடல்களில் மடித்து தருவது வழக்கம். மறந்து விட்டது

செடியில் கொடியில் மலரும் பூக்களுக்கு மத்தியில் இது புல் வகையில் மலரும் பூ.. இதன் வாசத்திற்கு பாம்புகள் இதன் புதரிலேயே இருக்கும்.

தாழம் பூ என்று ஒரு திரைப்படம் வந்தது.பாரதிதாசனின் ஒரு கவிதையில் தலைமேல தாழம்பூ ன்னு வரிகள் வரும். பல திரைப்பாடல்களில் தாழம் பூ பற்றி வரும்,

உதா. தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல மணமிருக்கும்
உதய கீதம் - தேனே தென்பாண்டி மீனே ( தாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா)
உழவன் - பெண்ணல்ல (சித்திர மேனி தாழம் பூ)

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர பெண்களின் இருதயத்திற்கு வலிமையூட்டி, (ஆண்களின் இருதயதை நெகிழச்செய்து) உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.
இப்பொழுது தாழம் பூ விற்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தியா வந்தபின்பு செடி கிடைத்தால் வீட்டில் வைக்க வேண்டும்.

5 கருத்துகள்:

Mathu சொன்னது…

Oh...தாழம்பூ இதுதான் முதல் தடவை பார்கிறேன்...படத்திலும் கூட...நன்றி :)

Unknown சொன்னது…

நான் தாழம்பூ நேர்ல பார்த்ததில்ல.. :(( கட்டுரை அருமை.. :))

Several tips சொன்னது…

உண்மை தான்

அன்புடன் மலிக்கா சொன்னது…

சும்மா பேசலாம் வாங்க -ன்னு கூப்பிட்டு,

தாழம்பூவில் தாளம்போடவைதிட்டீங்களா..

http://niroodai.blogspot.com/

அன்புடன் மலிக்கா சொன்னது…

சும்மா பேசலாம் வாங்க -ன்னு கூப்பிட்டு,

தாழம்பூவில் தாளம்போடவைதிட்டீங்களா..

http://niroodai.blogspot.com/