செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குளிர்கால ஒலிம்பிக்ஸில் வருங்காலத்தில் நமக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு!!!!!!!!

சின்ன வயசில் சிகரெட் பாக்கெட்டுகளை சேர்த்து அதை தெருவில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து கல்லால் செதுக்கி அடித்து விளையாடி இருப்போம். கோல்ட் பிளெக் கிங்ஸ் அட்டைகளுக்கு மதிப்பு அதிகம். யார் அதிகமாக சிகரெட் அட்டைகளை வட்டத்திலிருந்து வெளியே அடிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த அட்டைகள் சொந்தம்.

அல்லது தப்பட்டையான கல்லை ஒரு வட்டம் இட்டு அதற்குள் வீசி எறிய மற்றவர்கள் நம் கல்லை வட்டத்திலிருந்து அவர்கள் கல் மூலம் வெளியேற்றி விளையாடி இருப்போம்.
இந்த மாதிரியான விளையாட்டுகள் எல்லாம் உலக அளவில் மதிக்கபட்டு ஒலிம்பிக்ஸில் இருந்தால் இந்தியாவுக்குதான் எல்லா பதக்கமும் என்று எல்லாம் நண்பர்களுடன் வெட்டி மாநட்டில் பேசி இருந்திருக்கிறோம்.



இன்னைக்கு நெஜமாவெ குளிர்கால ஒலிம்பிக்ஸ் பார்க்கும் போது ஹார்ட் அட்டாக் வராத குறைதான். கிட்டதட்ட கல் அடித்து விளையாடுவதை போல ஒரு விளையாட்டு. முதல்ல ஒன்னுமே புரியலெ. பக்கத்துல ஓடிக்கிட்ட இருந்த அக்காகிட்ட என்னக்கா இது ரோபட் வேக்குவம் கிளினர் மாதிரி ஐஸ் கிரவுண்டை வளுவளுவாக்கறாங்களான்னு கேட்டேன்.அது என்னை ஒரு மாதி பாத்துகிட்டு இதுக்கு பேரு கர்லிங்(Curling). அமெரிக்காவும் ஜப்பானும் விளையாடுதுன்னாங்க. என்னது இது விளையாட்டான்னு ங்கெ ன்னு முழிச்சேன்.



அப்புறம் அவங்களே விளக்கமா சொன்னங்க. ஐஸ்கிரவுண்ட்டுக்குள் ஒரு அணி வட்டத்துக்குள் வட்ட வடிவ தட்டை ஒன்றை வீசி எறிய எதிர் அணி அதை அவர்களுடைய தட்டை கொண்டு வெளியேற்றே வேண்ட்டும். மூன்று வட்டங்கள் ஒன்றான் உள் ஒன்றாக. எவ்வளவு சீக்கிரம் வெளியேற்றுகிறோமே அதை பொருத்து புள்ளிகள்.



அடடா இது எப்ப இருந்து ஒலிம்பிக்ஸ்ல இருக்குன்னு விக்கிய தேடுன்னா 1998ல் இருந்து அதிகாரபூர்வமாக இருக்குன்னு பார்த்தேன்.



இதை தெரிஞ்சுகிட்டதுல இருந்து மனசு அய்யோ வடை போச்செ! நம்ம நாட்டுகாரங்க்களுக்கு எல்லாம் தெரியாம போச்சேனு அடிச்சுகிட்டே இருக்குது. அப்புறம் தேடி பாத்ததுல நம்ம நாட்டுல இருந்து இந்த விளையாட்டுக்கு யாரும் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கலை. பல் அன்னிய உள்நாட்டு சதிகள் தமிழரின் பெருமை உலகுக்கு தெரியகூடாதுன்னு நம்ம கிட்ட எல்லாம் இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்தது பத்தி சொல்லலை.......: சசி தருர் கிட்ட சொல்லி டிவிட்ட சொல்லனும்....



நம்ம ஆளுங்களுக்கு மட்டும் தெரிஞ்சா இனி எல்லா ஒலிம்பிக்ஸிலும் நமக்கு தான் எல்லா பதக்கமும். யாருக்காச்சும் இந்த விளையாட்டை பற்றி மேலதிக தகவல்கள் தெரிஞ்சா பகிர்ந்து கொள்ளுங்கள்.

வியாழன், 27 நவம்பர், 2008

தாழம் பூ



தாழம் பூ

தாழம்பூ பார்த்து இருக்கீங்களா. வெளிர் மஞ்சள் நிறத்திலும்,சில சமயம் தங்க மஞ்சள் நிறத்திலும் இருக்கும். எங்க அம்மாவுக்கு ரொம்பபிடித்த பூக்களில் இதுவும் ஒன்று.


இதன் வாசம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று. தாழம்பூவின் வாசனை சும்மா கும்முன்னு இருக்கும். கிளர்ச்சியூட்டகூடியது. கோவை காந்திபுரத்தில் நெல்லை லாலா கார்னரை கடந்து போகும் இடத்தில் இரு பெண்கள் கூடையில் பூ வைத்து வியாபராம் செய்வார்கள். இவர்களிடம் பெரும்பாலும் செண்பகமும் ஜாதிமல்லியும் இருக்கும்..எப்போதாவது தாழம்பூவும் இருக்கும். அவர்கள் பூ விற்கும் இடத்தை நெருங்கும் முன்பே அவர்களிடம் இருந்தால், தாழம் பூ நறுமணம் அங்குள்ள விநாயகர் கோவில் டூ அன்ணபூர்னா வரை கமழும்.

மாலை நேரத்தில் அந்த நறுமணத்தில் அங்கு உலகமே அழகாக தோன்றும். பூமார்க்கெட் அப்புறம் காந்திபுரம் தவிர வேறு எங்கும் இந்த பூ கோவையில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

தாழம் பூ என்றாலும் இது மற்ற பூக்கள் போல இதழ்கள் கொண்டு இருப்பதில்லை மாறாக தாழம் மடல்கள் கொண்ட பூ.. தலையில் சூடும் போது பெண்கள் இதை இரண்டாக அல்லது மூன்றாக மடித்து கொள்வார்கள். கடவுளுக்கு சூட்டுவது இல்லை என்று நினைக்கிறேன். தாழம் பூ சிவனிடம் பொய்சாட்சி சொன்னதால் விலக்கபட்ட பூ என்பார்கள். ஆனா எங்கோயா சந்தனம் தாழம் மடல்களில் மடித்து தருவது வழக்கம். மறந்து விட்டது

செடியில் கொடியில் மலரும் பூக்களுக்கு மத்தியில் இது புல் வகையில் மலரும் பூ.. இதன் வாசத்திற்கு பாம்புகள் இதன் புதரிலேயே இருக்கும்.

தாழம் பூ என்று ஒரு திரைப்படம் வந்தது.பாரதிதாசனின் ஒரு கவிதையில் தலைமேல தாழம்பூ ன்னு வரிகள் வரும். பல திரைப்பாடல்களில் தாழம் பூ பற்றி வரும்,

உதா. தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல மணமிருக்கும்
உதய கீதம் - தேனே தென்பாண்டி மீனே ( தாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா)
உழவன் - பெண்ணல்ல (சித்திர மேனி தாழம் பூ)

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர பெண்களின் இருதயத்திற்கு வலிமையூட்டி, (ஆண்களின் இருதயதை நெகிழச்செய்து) உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.
இப்பொழுது தாழம் பூ விற்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தியா வந்தபின்பு செடி கிடைத்தால் வீட்டில் வைக்க வேண்டும்.